Mohammed Farook Mohammed Farook Author
Title: அப்பாவி இளைஞர்கள் மீது தீவிரவாத பழி சுமத்திய தொலைக்காட்சிகள் மன்னிப்பு கேட்குமா?
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பெரும்பாலான தமிழ் தொலைகாட்சிகளில், கோவையில் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதி கைது என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈராக், சிரியாவி...
பெரும்பாலான தமிழ் தொலைகாட்சிகளில், கோவையில் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதி கைது என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈராக், சிரியாவில் உள்ள தீவிரவாத இயக்கம் தமிழகத்திலும் காலூன்றிவிட்டதோ என அனைவரும் அச்சப்பட்டு இருக்கும் நிலையில் இதுவொரு பொய்யான செய்தி என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த கோவை யூசூப் அவர்கள் இதுகுறித்து பாலிமர் நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது கடைசி வரை பாலிமர் நிர்வாகத்தினர் மழுப்பலாக பதில் கூறியதாக தெரிகிறது.
 
உண்மையில் கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்கள், ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருக்கின்றார்களோ என்ற சந்தேகத்தில் விசாரணைக்காக மட்டுமே காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் அவர்கள் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் கைது என்ற செய்தியை கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஸ்குரோலில் ஓடவிட்ட பாலிமர் டிவி, விடுவிக்கப்பட்ட செய்தியை தெரிவிக்கவில்லை என்று கோவை யூசூப், பாலிமர் டிவி நிர்வாகத்திடம் கண்டனம் தெரிவித்த ஆடியோ ஒன்று வெகுவேகமாக தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 
அந்த முஸ்லீம் சகோதரர் கேட்பது ஒன்றே ஒன்றுதான். உண்மையில் கைது செய்யப்பட்டவர் ஐ.எஸ்,தீவிரவாதிகள் என்றால் அதற்குரிய ஆதாரத்தை தெரிவியுங்கள். அல்லது. தவறுதலாக செய்தி வெளியிட்டதற்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் என்பதுதான். இதை பாலிமர் டிவி நிர்வாகம் செய்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top