Mohammed Farook Mohammed Farook Author
Title: ஆஹா...வாட்ஸ் அப்பில் வந்துவிட்டது சூப்பர் வசதி!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் மிக பிரபலமானதாக திகழ்கிறது. இதை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதி...

சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் மிக பிரபலமானதாக திகழ்கிறது. இதை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வாட்ஸ் அப்பில் இது நாள் வரை ஆடியோ காலிங் வசதி மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில் ஆண்டராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களுக்கு வீடியோ காலிங் வசதியை தற்போது அதிகாரபூர்வமாக அந்த நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது.

ஆனால் அதில் ஒரு டிவிஸ்ட்! ஆண்ட்ராய்டில் வாட்ஸ் அப் ’பீட்டா’ பயனாளிகளுக்கு மட்டுமே இந்த சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கால் செய்பவருக்கும் அதை மறுமுனையில் அட்டண்ட் செய்பவருக்கும் போனில் பீட்டா பதிப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.
ஒரு வேளை நாம் வீடியோ கால் மேற்கொள்பவர் பீட்டா இல்லாத பழைய பதிப்பு வாட்ஸ் அப்பை பயன்படுத்தினால் போனில் “Couldn’t place call” என்ற வார்த்தை கேட்கும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ காலிங் வசதி வரும் காலத்தில் எல்லா வித வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் வெளிவருமா என்பதை பற்றி அந்நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்படத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top