Mohammed Farook Mohammed Farook Author
Title: இராக்கில் மது விற்க தடை!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இராக்கில் மதுபானத்துக்குத் தடை விதிக்கும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இராக்கில் அனைத்து வகையான மது...
இராக்கில் மதுபானத்துக்குத் தடை விதிக்கும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இராக்கில் அனைத்து வகையான மதுபானத் தயாரிப்பு விற்பனை மற்றும் அவற்றின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வகை செய்யும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு சிறுபான்மையினர் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இருப்பினும் பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவுடன் மதுபானத் தடை மசோதா இராக் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதுகுறித்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மூத்த எம்.பி. யோநதம் கன்னா கூறியதாவது: இராக்கில் மதுபானப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் சாசனப் பிரிவு 14-ன் கீழ் அனைத்து வகையான மதுபானங்களை உள்நாட்டில் தயாரிப்பது விற்பனை செய்வது மற்றும் அவற்றை இறக்குமதி செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறுவோருக்கு ரூ.5.28 லட்சம் முதல் ரூ.13.20 லட்சம் வரையில் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.மதுபானத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டப்பிரிவு இராக் அரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை முற்றிலும் மீறுவதாக அமைந்துள்ளது.

இந்தப் புதிய சட்டத்தால் இராக்கில் பலருக்கு வேலை இழப்பு உண்டாகும். மேலும் போதைப் பொருள்கள் பயன்பாடு வெகுவாக அதிகரிப்பதுடன் இராக் பொருளாதாரம் பாதிப்படையும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த மதுபானத் தடை சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம் என்றார்.மதுபானத் தடை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அம்மர் தோமா எம்.பி கூறுகையில் மதுவுக்கு இஸ்லாமில் இடமில்லை. இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க முடியாது.

புதிய சட்ட மசோதா முற்றிலும் இராக் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டுத்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து மொசூல் நகரைக் கைப்பற்ற இராக் ராணுவத்தினர் கடுமையாகப் போராடி வரும் நிலையில் இராக் நாடாளுமன்றத்தில் மதுபான தடைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top