"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/10/16

சீனாவில் இரவு நேரங்களில் இணையதளம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சிறுவர்கள் இணையதள விளையாட்டுக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து அந்நாட்டு சைபர்ஸ்பேஸ் துறையினர் சிறுவர்கள் இரவு நேரங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட தடை விதித்துள்ளனர். சிறுவர்கள் இணையதளத்தில் அடிமையாவதை தடுப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவில் இணையதளம் பயன்படுத்துபவர்களில் 23% பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இளைஞர்கள் இணையத்துக்கு அடிமையாகி வருவது குறித்து சீன வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, சீனாவில் இணையத்துக்கு அடிமை யானவர்களுக்கு என சீர்திருத்த மையங்கள் அதிக அளவில் உருவாகி வருகிறது என கூறியுள்ளார்.
 
இந்த மையங்களில் சேர்க்கப்படும் சிறுவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது சீன இளைஞர்களின் பேரழிவுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். சீனாவில் இந்தத் தடைக்கு பலர் வரவேற்பு அளித்துள்ளனர். இணையதள விளையாட்டு நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.