vkrnajur vkrnajur Author
Title: உலகில் எதிர்கால விஞ்ஞானிகள் யார் ?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது. நமது அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொன்றிலும் அறிவியல் மறைந்திருக்கிறது. இதற்கு...

அறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது. நமது அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொன்றிலும் அறிவியல் மறைந்திருக்கிறது. இதற்கு காரணம் விஞ்ஞானிகள்.
இவர்கள்தான் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அறிவியல் சாதனங்களை கண்டுபிடித்து உலகத்துக்கு அளிக்கின்றனர். இவர்களது பணி
பாராட்டுக்குரியதே.இந்நிலையில், வரும் 2030ல் எதிர்கால விஞ்ஞானிகள் எந்த நாட்டில் இருந்து அதிகளவில் வருவார்கள் என்ற ஆய்வு முடிவை 'OECD' எனும்
'பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு' வெளியிட்டுள்ளது.

இதில் உலகளவில் சீனாவில் இருந்து தான் அதிகளவு விஞ்ஞானிகள் உருவாகுவார்கள் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிவியலின் பயன் மின்விளக்கு, அலைபேசி, கம்ப்யூட்டர், வானளாவிய கட்டடங்கள், கடல் நடுவே பாலங்கள், விமானங்கள், அணைகள், செயற்கைக்கோள்கள், மரபணு மாற்றம், பல வண்ண ஆடைகள், பலவித உணவுகள் என நாம் அனுபவிக்கும் அனைத்துக்கும் அறிவியல் தான் அடிப்படை.

அதே நேரத்தில் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் நன்மை, தீமை சேர்ந்தே இருக்கும். எனவே அறிவியலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் நமக்கு நன்மையே.

சீனா முதலிடம்


STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் ஆகிய பட்டப்படிப்புகளை படிக்கும் மாணவர்களின் சதவீதம் அடிப்படையில் 'ரேங்க்' வெளியிடப்பட்டுள்ளது. இதில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. ஓ.இ.சி.டி., மற்றும் ஜி20 ஆகிய நாடுகளில் இருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. (ஓ.இ.சி.டி., அமைப்பில் உலகின் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் 35 நாடுகளும், ஜி20 அமைப்பில் 20 நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன).

இந்த ரேங்க் பட்டியலில் சீனா மற்றும் இந்தியா முன்னணியில் இருந்தாலும், பெரிய
கண்டுபிடிப்புகளில் மேற்கத்திய நாடுகளே முன்னணியில் திகழ்கின்றன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top