"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
13/10/16

பூமியின் முடிவு நெருங்கிவிட்டதாக பீதி கிளப்பும் விஞ்ஞானிகள்!!!

பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் பல சிறுகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

சூரிய மண்டலத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே ஆயிரக்கணக்கில் குறுங்கோள்கள் மற்ற கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.
இவற்றில் சில ஒரு பெரிய மலையளவு கூட இருக்கும். அவை பூமி மீது மோதினால் கற்பனைக்கு எட்டாத அழிவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமியை காக்க நாசா முயற்சி

நாசா சமீபத்தில் இந்த வகையான சிறுகோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறது. பென்னு என்ற சிறுகோள் ஒன்றிற்கு விண்கலம் அனுப்பி ஆராய முற்பட்டுள்ளது. ஆராய்ச்சியின் மூலம் அண்டங்கள் மற்றும் உயிரனங்கள் தோன்றியது எப்படி என்று அறிய முயற்சி செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய சிறுகோள்களை திசை திருப்பும் முயற்சியிலும் அது இறங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சிறுகோள்களினால் ஏற்படும் விளைவுகள்

ஆபத்து மிகுந்த அதாவது அளவில் பெரிய சிறுகோள் ஒன்று பூமி மீது மணிக்கு 60,000 கி.மீ., வேகத்தில் மோதினால் அது கடலில் விழுந்தாலும் உலகம் முழுவதும் பல நூறு அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும் என்று விஞ்ஞானிகள் கணித்து வைத்திருக்கின்றனர். இதுபோன்ற ஒரு அழிவில் தான் டைனோசர் இனம் அழிந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் 10 மைல் விட்டம் கொண்ட 2009இ.எஸ்., என்று பெயரிடப்பட்ட ஒரு சிறுகோள் ஒன்று பூமி மீது சில ஆண்டுகளில் மோத வாய்ப்பு உள்ளதாக சீன வானவியலாளர் பீதியை கிளப்பி உள்ளார். அது மோதும் போது 300 கோடி அணுகுண்டுகளின் சக்தி வௌிப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.