"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/10/16

காத்மாண்டு - நேபாளத்தை சேர்ந்த கவுரப் கரும் என்ற 2 வயது சிறுவனுக்கு 3 கைகள் உள்ளது. நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது. அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான், தூங்கும் போது மிகவும் சிரமப்படுகிறான். அவனது 3-வது கை முதுகு தண்டு வடத்தில் இருந்து உருவாகியுள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக தாயின் கருவில் இரட்டைக் குழந்தைகளாக உருவாகி அது முழு வளர்ச்சி அடையாமல் இருப்பதால் இது போன்று கைகள் உருவாகின்றன என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற விபரீதங்கள் 1500-ல் ஒரு குழந்தைக்கு அரிதாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தேவையின்றி கூடுதலாக உருவாகியுள்ள அந்த கையை ஆபரேசன் மூலம் அகற்றுவது மிகவும் ஆபத்தானது. அதை அகற்றுவதன் மூலம் சிறுவனின் தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் பக்கவாதம் நோய் உருவாக பெருமளவில் வாய்ப்பு உள்ளது. எனவே அதை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நேபாளத்தில் ஒரு பகுதி மக்கள் மத நம்பிக்கையில் மிகவும் ஈடுபாட்டுடன் திகழ்கின்றனர். கர்ப்பகாலத்தில் மருத்துவ சிகிச்சை, ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்ள அவர்களது மதகுருமார்கள் அனுமதிப்பதில்லை. அது போன்ற காரணங்களால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.