காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: பாலைவன பிரதேசத்தில் 3 நாள் மழையில் 222 மில்லியன் கனஅடி நீர் சேமிப்பு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு என்பதால் பாரம்பரியமாக இயல்பாய் கடத்தப்பட்டு வரும் விவசாய, நீர்மேலாண்மை அனுபவமும் பல்லாயிரம் ஆண்டுக...
இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு என்பதால் பாரம்பரியமாக இயல்பாய் கடத்தப்பட்டு வரும் விவசாய, நீர்மேலாண்மை அனுபவமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதால் நம் தேசம் பிற வெளிநாடுகளுக்கு விவசாயத்திலும், நீர்மேலாண்மையிலும், சேமிப்பிலும் முன்மாதிரியாக திகழ வேண்டியது ஆனால் நமக்கு வாய்த்த ஆட்சியாளர்களாலும், பொறுப்பற்ற பொதுமக்களாலும் கத்துக்குட்டி நாடுகளிடம் நீர்மேலாண்மை, நீர் சேமிப்பு குறித்து கற்றுக் கொள்ள வேண்டிய அவலநிலை.

இதுதான் விஷயம், கடந்த வாரம் அமீரக வானிலை மையம் அமீரகத்தில் இன்னும் 48 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று முன்னறிப்பு செய்திருந்ததைப் போலவே ராஸ் அல் கைமா, புஜைரா, ஷார்ஜாவின் சில பகுதிகள் என மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கனமழையை தொடர்ந்து களத்தில் இறங்கிய அமீரக அரசு அதிகாரிகள் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள்,  போக்குவரத்து மாற்றங்களுடன் பெய்த மழைநீரை சேமிக்கும் நடவடிக்கையிலும் இறங்கினர். விளைவு, 3 நாள் மழையால் தற்போது 222 மில்லியன் கனஅடி நீரை (சிறு சிறு) அணைகளில் விவசாய தேவைகளுக்காக சேமித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஆனால், நாம் கடந்த வருடம் வந்த மழைநீரை கடலில் விட்டுவிட்டும், பாசன வாய்க்கால்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் என அனைத்து நீர்நிலைகளையும் தூர்ந்துபோக விட்டுவிட்டு கர்நாடகக்காரனுடன் மட்டும் நாம் உரிமை போராட்டம் நடத்திக் கொண்டுள்ளோம்.

எனவே, ஆட்சியாளர்கள் திருந்துவதும், கர்நாடகக்காரன் நீர் திறந்துவிடுவதும் ஒருபுறம் நடக்கட்டும், நமதுபங்காய் ஒவ்வொரு குடிமகனும் மழைநீரை சேமிப்போம், இயன்றளவு நீர்நிலைகளை தூர்வாருவோம், முடிந்தளவு மரங்களை நடுவோம்.

மாற்றங்கள் நம்மிடமிருந்து ஆரம்பமாகட்டும்!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top