vkrnajur vkrnajur Author
Title: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாதாந்திர தேர்வு ரத்து !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
விடுமுறை நாட்களை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, மாதாந்திர தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது; அரையாண்டுக்கு முந்தைய தேர்வு ...
விடுமுறை நாட்களை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, மாதாந்திர தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது; அரையாண்டுக்கு முந்தைய தேர்வு மட்டும் நடத்தப்பட உள்ளது. பள்ளிகளுக்கு, விஜயதசமி விடுமுறை, ஐந்து நாட்கள் விடப்பட்டது; இன்று விடுமுறை முடிகிறது; நாளை, பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், தீபாவளி உட்பட பல்வேறு பண்டிகை நாட்களும், விடுமுறை நாட்களும் தொடர்ந்து வர உள்ளன. அதனால், நவம்பர் மற்றும் டிசம்பரில், குறைந்த நாட்களே வகுப்புகள் நடக்கும். எனவே, பாடங்களை விரைந்து முடிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாதந்தோறும் நடத்தப்படும் தேர்வுகள், பல மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாதத் தேர்வுகளுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதாவது, அரையாண்டு தேர்வுக்கு முன்பாக, நவ., 8 முதல், 25க்குள் ஒரு தேர்வு நடத்தும்படி, பள்ளிகள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளன. இதையடுத்து, டிச., மூன்றாம் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top