காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: 2 நாள் கெடு; ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிடலனா நடவடிக்கை எடுப்பேன்: சொல்வது யார் தெரியுமா?
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டும் என பல்வே...
உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
திமுக தலைவர் கருணாநிதியும் அறிக்கை வெளியிட்டு முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து கூறிய அவர், முதல்வரின் உடல்நிலை குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்ல வேண்டியது அரசின் கடமை. அங்கு  என்ன தான் நடக்கிறது என்பதை  நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு உண்டு.
 
மேலும், இரண்டு நாட்களில் தெரியவில்லை என்றால் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுப்பேன். திமுக தலைவர் கலைஞர் சொன்னது போல் புகைபடம் வெளியிட வேண்டும், அல்லது வாட்ஸ் ஆப்பில் குரல் செய்தியாவது வெளியிட வேண்டும் எனவும் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top