Mohamed Farook Mohamed Farook Author
Title: பக்ரீத் பண்டிகையில் விலங்குகளை பலியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பக்ரீத் பண்டிகையின்போது விலங்குகளை பலியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் பொது நல வழக்கைத் ...
பக்ரீத் பண்டிகையின்போது விலங்குகளை பலியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் பொது நல வழக்கைத் தொடுத்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தினரால் கொண்டாடப்படும் பக்ரீத் என்கிற ஈகைத் திருநாளின்போது, ஒட்டகம், ஆடு போன்ற விலங்குகளை பலியிடுவது வழக்கம். இதற்கு தடை விதிக்கக் கோரி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

பக்ரீத் பண்டிகையின்போது சாலைகள் மற்றும் பொது இடங்களில் விலங்குகளை ஆண்டுதோறும் பலியிடுகின்றனர். மனிதத் தன்மையற்ற முறையில் விலங்குகளை பலியிடுவதைப் பார்ப்போருக்கு இது அருவருப்பைத் தருகிறது.

இதனால் சாலைகளில் விலங்குகளின் ரத்தம் தேங்குவதால் பொதுமக்கள் உணர்வுப்பூர்வமாக பாதிக்கப்படுகின்றனர்.
விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டமானது, மத ரீதியில் விலங்குகளைக் கொல்வதிலிருந்து விலக்கு அளித்திருந்தாலும், அவற்றை எந்த இடங்களில் எவ்வாறு பலியிடுவது என்பது போன்று அந்தச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே பக்ரீத் பண்டிகையின்போது மதத்தின் பெயரில் காட்டுமிராண்டித்தனமாக விலங்குகளை பலியிடுவதை அரசமைப்புக்கு எதிரான செயலாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கில் உள்துறை, சட்டம் மற்றும் நீதி, சுற்றுச்சூழல் மற்றும் வனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சகங்கள், இந்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றை பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top