Mohamed Farook Mohamed Farook Author
Title: அபுதாபியில் மின்சார, தண்ணீர் கட்டணங்களை அஞ்சலகங்களில் கட்டலாம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அபுதாபி, செப்-21 வாடிக்கையாளர்களின் வசதிக்காக அபுதாபியில் மின்சாரம் மற்றும் தண்ணீர் உபயோக கட்டண பில்களை (ADDC) இனி அபுதாபியின் சிறிய, ப...
அபுதாபி, செப்-21
வாடிக்கையாளர்களின் வசதிக்காக அபுதாபியில் மின்சாரம் மற்றும் தண்ணீர் உபயோக கட்டண பில்களை (ADDC) இனி அபுதாபியின் சிறிய, பெரிய அனைத்து அஞ்சலகங்களிலும் செலுத்தலாம் என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே மின்சார அலுவலகத்திலும் ஆன்லைனிலும் செய்யப்பட்டிருந்த இந்த வசதி அஞ்சலகத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டிருப்பதன் மூலம் துண்டிக்கப்பட்ட இணைப்புக்களை கட்டணத்தை செலுத்திய உடன் மீண்டும் விரைவாக பெற முடியும்.

பல்வேறு கிளை அஞ்சலகங்களும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு திறந்திருந்து செயல்படும் நிலையில் அபுதாபியின் தலைமை அஞ்சலகம் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி கட்டணத்தை செலுத்த இயலும். மேலும் வாரத்தில் 6 நாட்கள் அஞ்சலகங்கள் செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு: www.epg.gov.ae

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top