Mohamed Farook Mohamed Farook Author
Title: திருப்பத்தூரில் அத்துமீறிய காவல்துறை: களத்தில் தமுமுக!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
திருப்பத்தூரில் இஸ்மாயில் என்ற 15 வயது மாணவன் நேற்று முன் தினம் (05/09/16) இரவு 11:45 மணியளவில் தனது உறவினர்களை ரயிலில் வழியனுப்பி வி ட்ட...
திருப்பத்தூரில் இஸ்மாயில் என்ற 15 வயது மாணவன் நேற்று முன் தினம் (05/09/16) இரவு 11:45 மணியளவில் தனது உறவினர்களை ரயிலில் வழியனுப்பி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நிலையில் ரவுண்ட்ஸ் வந்த காவலர்கள் அதியமான் மற்றும் ஒருவர் எந்த காரணமும் இல்லாமல் அந்த மாணவனை லத்தியால் கடுமையாக தாக்கி உள்ளார்கள்.

தாக்குதலில் அந்த மாணவன் மயங்கி கீழே விழுந்ததும் அங்கேயே விட்டுவிட்டு அந்த காவலர்கள் ஓடியுள்ளனர். தகவல் அறிந்த தமுமுகவினர் அந்த மாணவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதனை தொடர்ந்து தமுமுக மாநில தலைவர் J.S.ரிஃபாயி அவர்களின் ஆலோசனைப்படி,, மாவட்ட செயலாளர் தலைமையில் திரண்ட தமுமுகவினர், DSP திரு.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து, இரக்கமற்ற காவலர் அதியமான் உள்ளிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்துள்ளனர்.

அந்த காவலர்களின் செயலுக்கு நம்மிடமும் வருத்தம் தெரிவித்ததோடு, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் நம்மிடம் DSP வாக்குறுதி அளித்துள்ளார்.

தான் அளித்த வாக்குறுதியை DSP காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், தமுமுகவினரும் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களும் அமைதி காத்து வருகின்றனர்.

   


செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top