vkrnajur vkrnajur Author
Title: எச்சரிக்கை! முஸ்லிம் பெண்பிள்ளைகள் பேஸ்புக் பாவிப்பதால் சிக்கல்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ, முகப்புத்தகம் அதிக நன்மைகள் நமக்கு செய்தாலும் அதில் ஒரு சில சிக்கல்களும் நமக்கு இருக்கிறது, இலங்கை முஸ்லிம் பெண்களுக...
அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ,

முகப்புத்தகம் அதிக நன்மைகள் நமக்கு செய்தாலும் அதில் ஒரு சில சிக்கல்களும் நமக்கு இருக்கிறது, இலங்கை முஸ்லிம் பெண்களுக்கு இது விதிவிலக்கல்ல, முஸ்லிம்களால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்ற அநியாயக்காலம் இதுவாகும் இதனை நவீன ஜாஹிலியா என்று கூறலாம்.

எல்லாவற்றையும் பிழையாகவும் நோக்க முடியாது அதே போலத்தான் இலங்கை முஸ்லிம் பெண்பிள்ளைகளின் செயற்பாடுகளும், காரணம் இன்று அதிகப்படியாக எமது பிள்ளைகள் SMART PHONE பாவிக்கின்றார்கள் இதில் உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் பாரிய ஆபத்துக்கள் எமது பிள்ளைகளுக்கு நிகழ்கிறது.

உதாரணமாக பேஸ்புக் (FaceBook) பற்றி அறியாமலே எமது பிள்ளைகள் அதில் எக்கவுண்ட் ஓபன் செய்து பாவனை செய்கிறார்கள், இதன்மூலம் நண்பர்களை அறிந்தவர்களையும் அறியாதவர்களையும் ADD பண்ணுகிறார். ஒரு ஆசையில் அவர்களுடன் பேச்சுவார்தை Chat செய்கிறார்கள், இந்த பேச்சுவார்த்தைகள் அளவுக்கு மீறி செல்கிறது இதில் புகைப்படங்கள் பரிமாறப்படுகிறது அதற்குப்பிறது சுய இன்பம் காணுவது தொடக்கம் அதனை செய்வது போன்ற புகைப்படங்களும் பேச்சுக்களும் பரிமாறப்படுகிறது. (அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்) இதன் பிறகு இந்த சாட்டிங் History, Photos போன்றவற்றிற்கு எமது பிள்ளைகளிடம் டிமாண்ட் பேசப்படுகிறது. இதன் பிறகு அச்சம் காரணமாக அந்த டிமாண்டுகளுக்கு நமது பிள்ளைகள் அடிப்பட்டு மானத்தை விற்கிறார்கள் இவையெல்லாம் சோடிக்கப்பட்ட கதையல்ல. எமது வாசகர் ஒருவர் நடந்த சம்பவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டு கவலைப்பட்டு அந்த ஆதாரங்களை எங்களுக்கு காட்டிய பிறகே இந்த செய்தி பிரசுரிக்கப்படுகிறது.

இவை ஒருபுறமிருக்கு தெரிந்த நண்பர்களாலும் சதிகள் நடக்கிறது தங்கள் காம இச்சைக்கு நண்பிகளையும், வயதில் மூத்தவர்களையும் இப்படியான டிமாண்டுகள் மூலம் கணவன்மார்களுக்கு தெரியாமல் வயதில் இளைய பருவத்தினரோடு உறவு கொண்டு இருக்கின்றனர். இவைகள் வாட்ஸ்அப் மூலமாகவும் நடைபெறுகிறது. அங்கும் இதே அவல நிலை.

மேலே குறிப்பிட்ட விடயங்கள் மாற்றுமத சகோதரர்கள் செய்வது அல்ல நமது முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் கல்நெஞ்சக் கார்களின் செயலாகும். இவை ஆண்களால் செய்யப்படுகிறது.

இன்னுமொருபுறம் வெளிநாடுகளுக்கு கணவன்மாரை வேலைக்காக கஷ்டப்பட அனுப்பிவிட்டு அங்கு கஷ்டப்பட்டு வாங்கி அனுப்பிய இங்கு 4G மொபைல் போனை  இன்னுமொரு ஆணுடன் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் கதைப்பதற்கு பாவிக்கின்றனர். இது மாத்திரமின்றி இந்த மொபைல்களில் ஆபாச படங்களை பார்ப்பது அதற்கு இன்டர்நெற் கணவனிடமே பணம் பெறுவது இப்படியான கீழ்த்தரமான செயல்களையும் எமது முஸ்லிம் பெண்கள் எமது ஊர்களில் செய்துவருகின்றனர். (அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்)

தந்தைமார்களின், கணவன்மார்களின் அதீத கவனத்திற்கு,

தங்கள் பிள்ளைகள் மனைவிமார் என்ன செய்கிறார்கள், இஸ்லாத்திற்கு மாறான இப்படியான சமூகவலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் அல்லது அதுபற்றிய அறிவை வளர்த்துக்கொண்டு அவர்கள் செய்யும் செயலை கண்காணித்து நல்லதொரு முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்ப முன்வாருங்கள். அசிங்கமாக இருக்கிறது வேறு மத சகோதரர்களுடனும் இவ்வாறு பேசுகிறார்கள் என்று கேட்பதற்கு, அதுமாத்திரமின்றி அனைத்தும் பகிரங்மாக வெளிப்படுகிறபோது நெருப்பில் குதிக்க வேண்டி இருக்கிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top