Mohamed Farook Mohamed Farook Author
Title: ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர்தான் சரியான இடம். சுப்பிரமணியன் சுவாமி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
முதல்வர் ஜெயலலிதாவுடன் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எனது ஆலோசனை என்னவென்றால் அவர் உடனடியாக சிங்கப்பூர் சென்று சிகிச்ச...
முதல்வர் ஜெயலலிதாவுடன் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எனது ஆலோசனை என்னவென்றால் அவர் உடனடியாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.

ஒருகாலத்தில் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் போல் இருந்த சுப்பிரமணியசுவாமி தற்போது ஜெயலலிதாவின் பரம எதிரியாக உள்ளார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்கக் காரணமானவரான இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிரியாக இருந்தாலும் ஜெயலலிதா குணமடைய வேண்டும் என்று டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

இது குறித்து அவர் விடுத்துள்ள டிவீட்டில், எனது ஆலோசனை என்னவென்றால் உடனடியாக ஒரு விமானத்தை அமர்த்தி அவர் சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

நாம் எதிரிகளாக இருக்கலாம். ஆனால் அவர் நலமுடன், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் சாமி.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top