Mohamed Farook Mohamed Farook Author
Title: இஸ்லாமிய பெயர் கொண்டவர்களுக்கு வேலை வழங்குவதில் நாட்டம் இல்லை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஜேர்மனியில் உள்ள நிறுவனங்கள் இஸ்லாமிய பெயர் கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் அதிக நாட்டம் காட்டுவதில்லை என ஆய்வில் தெரியவந்துள...
ஜேர்மனியில் உள்ள நிறுவனங்கள் இஸ்லாமிய பெயர் கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் அதிக நாட்டம் காட்டுவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வு ஒன்றை சமீபத்தில் ஜேர்மனியில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்டுள்ளது. இதில் 1500 நபர்களின் வேலைக்கான விண்ணப்பத்தை ஆய்வு செய்த குறித்த பல்கலைக்கழகம் அதில் Sandra Bauer என்ற பெயர் கொண்ட நபர்களுக்கு 18.8% வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் Meryem Ozturk என்ற இஸ்லாமிய பெயர் கொண்டவர்களுக்கு 13.5% மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி Meryem தனது புகைப்படத்தில் தலை மூடியிருந்தமையால் 4.2% நிறுவனங்கள் மட்டுமே அவரை வேலைக்கான நேர்முகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த ஆய்வறிக்கையில் வெளியான தகவல்கள் அனைத்தும் ஜேர்மனியில் தற்போது நிலவும் அரசியல் சமூக சூழலை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டு மட்டும் ஜேர்மனியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர். மட்டுமின்றி துருக்கியர்கள் மட்டும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ஜேர்மனியில் உள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top