Mohammed Farook Mohammed Farook Author
Title: கண்களில் அரிப்பா? இதை செய்யுங்கள் சரியாகிவிடும்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கண்களில் ஏற்படும் தற்காலிக எரிச்சல், அரிப்பு போன்றவற்றுக்குக் கை மருத்துவமாக நாமே சில சிகிச்சைகளைச் செய்யலாம். அதேநேரம், நாள்பட்ட பிர...
கண்களில் ஏற்படும் தற்காலிக எரிச்சல், அரிப்பு போன்றவற்றுக்குக் கை மருத்துவமாக நாமே சில சிகிச்சைகளைச் செய்யலாம். அதேநேரம், நாள்பட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவரையே நாட வேண்டும். சில எளிய முறைகள்:

> எப்போதுமே வெளியே போய்விட்டு, அலுவலகம் போய்விட்டு வீடு திரும்பிய பிறகு கண்களைத் தொடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிடுங்கள். பொதுவாகக் கைகளிலிருந்துதான் நுண்கிருமிகள் கண்களுக்கு அதிகம் தொற்றுகின்றன.

> வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும். வெள்ளரியைச் சாப்பிடுவது மட்டுமல்லாமல், வட்டமாக நறுக்கிக் கண்களின் மேல் வைத்தால் கண் அரிப்பு, எரிச்சல் குறையும்.

> ரோஸ் வாட்டர் கண் அரிப்பைக் குறைக்கும். ரோஸ் வாட்டரை நேரடியாகப் பயன்படுத்தாமல், தண்ணீரில் கலந்து கண் இமைகளின் மேல் தடவலாம், கழுவலாம், துணியால் ஒத்தி எடுக்கலாம்.

> அதேபோல நல்ல, குளிர்ச்சியான பாலில் பஞ்சை நனைத்துக் கண் இமைகளின் மேல் ஒத்தி எடுக்கலாம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top