காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: நம்பர் பிளேட் வாங்கலீயோ ! நம்பர் பிளேட்டு !! துபாயில் ஏலம்!!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
இதுவும் ஒரு வகையில் ஒட்டகத்திற்கு நகை போட்டு பார்க்கிற வேலை தான். முன்பெல்லாம் இதுபோன்ற 1 நம்பர், 2 நம்பர் என வாகன நம்பர் பிளேட்டுகள் ஏல...
இதுவும் ஒரு வகையில் ஒட்டகத்திற்கு நகை போட்டு பார்க்கிற வேலை தான்.

முன்பெல்லாம் இதுபோன்ற 1 நம்பர், 2 நம்பர் என வாகன நம்பர் பிளேட்டுகள் ஏலம் விடப்பட்டு தர்ம காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன ஆனால் இன்று அத்தகைய ஏலங்கள் போக்குவரத்து நிறுவனத்திற்கு வருமானம் தரும் அம்சம் மட்டுமே.

விஐபி நம்பர்கள் எனக் கருதப்படும் ஒற்றை எண், ஒரே மாதிரி இரட்டை எண், மூன்று எண், நான்கு எண் மற்றும் ஐந்து எண்கள் போன்ற பேன்ஸி வாகன நம்பர் பிளேட்டுகள் எதிர்வரும் அக்டோபர் 8 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் துபை போக்குவரத்துத் துறையால் (RTA) ஏலம் விடப்படவுள்ளன, அதற்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

சுமார் 80 வாகன நம்பர் பிளேட்டுகள் ஏலம் விடப்படவுள்ள நிலையில் கீழுள்ளவாறு சில சிறப்பு எண்களையுடைய நம்பர் பிளேட்டுகளின் எண்களையும் மாதிரிக்காக வெளியிட்டுள்ளனர்.

D - 5
P - 27
Q - 77
O - 111

குறிப்பு:
இதை ஒரு செய்தி என்ற அடிப்படையில் மட்டுமே பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதாக கருத வேண்டாம்.

நன்றி - adirainews

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top