Mohamed Farook Mohamed Farook Author
Title: மக்காவில் ஹஜ்ஜை நிரைவேற்ற ஒன்றுகூடிய இஸ்லாமியர்கள்..
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மக்காவில் ஹஜ்ஜை நிரைவேற்ற ஒன்றுகூடிய இஸ்லாமியர்கள்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைவனின் தி...
மக்காவில் ஹஜ்ஜை நிரைவேற்ற ஒன்றுகூடிய இஸ்லாமியர்கள்..
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைவனின் திருத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதுதான் ஹஜ் பயணத்தின் மிக முக்கிய நோக்கம்.

இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதர்களும் தன்னைப் படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு இணையாக யாரையும் ஆக்கக் கூடாது.

படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும், படைப்பினங்களை வணங்கக் கூடாது என்ற ஓரிறைக் கொள்கைக்காக தனது குடும்பத்தையே தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் (அலை) அவர்கள் காட்டித் தந்த பயணம்தான் இந்த ஹஜ் பயணம்.

யாருக்கு பொருளாதாரம், உடல் ஆரோக்யம், வாகன வசதி, செல்லும் பாதையில் பாதுகாப்பு, தான் சென்று திரும்பி வரும் வரை தனது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்ற வசதிகள் இருக்கிறதோ அவரின் மீது ஹஜ் கடமையாகும். இந்த வசதிகள் அனைத்தையும் பெற்ற ஒருவர் ஹஜ் செல்லாமல் இருந்தால் அவர் அல்லாஹ்விடம் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எவர் ஹஜ் செய்ய நாடுகின்றாரோ அவர் தாமதம் செய்யாமல் உடனே அதை நிறைவேற்ற வேண்டும். பின்னால் நிறைவேற்றலாம் என்று தள்ளிப்போடக் கூடாது. நிலைமை இப்படி இருக்க இன்றைய செல்வந்தர்களில் எத்தனையோ பேர் தமது வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவித்துவிட்டு கடைசியாக ஹஜ் பயணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

இப்படி நினைப்பதே ஒரு பாவச் செயல் என்பதை மறந்து விடுகிறார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டு உலகம் முழுவதும் இருந்து ஹஜ் பயணத்தை மேற்கொண்டுள்ள இஸ்லாமியர்களில் ஒன்றரை லட்சம் பேர் மெக்கா நகரை சென்றடைந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் அந்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும்.

சென்ற வருடம் போது விபத்து எதுவும் நிகழாமல் இருக்கும் பொறுட்டு சவுதி அரசு பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எதிர்பாரா விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில் புனிதப் பயணிகள் அனைவருக்கும் மின்னியல் கைப்பட்டை வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களை அறிந்து புனிதப் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ள அது உதவும்.

புனித மக்காவில் மட்டும் 800க்கும் அதிகமான சுற்றுப்புறக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புனிதப் பயணிகள் இங்கு வந்து சேர்ந்ததிலிருந்து, கடமைகளை முடித்துவிட்டுத் திரும்பும்வரை அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவிதச் சமரசமும் செய்யப்படமாட்டாது என்று மேஜர் ஜெனரல் முகம்மது அல் அஹ்மதி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top