Mohamed Farook Mohamed Farook Author
Title: இஸ்லாமிய குழந்தைகளுக்கு அல்குர்ஆன் பாடமெடுக்கும் இந்து சகோதரி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஆக்ரா: உ.பி.யில் மேற்கு பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 35 முஸ்லிம் குழந்தைகளுக்கு குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிற...
ஆக்ரா: உ.பி.யில் மேற்கு பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 35 முஸ்லிம் குழந்தைகளுக்கு குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிறார்.

உ.பி.யின் ஆக்ராவின் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த பூஜா குஷ்வாகா என்ற மாணவி கோவில் வளாகத்தில் முஸ்லிம் குழந்தைகளுக்கு இலவசமாக குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிறார். இது தொடர்பாக பூஜாவிடம் குரான் படிக்கும் 5 வயது சிறுமியின் தாயார் ஒருவர் கூறுகையில் இந்த வயதில் மாணவியின் திறமையை பார்த்து ஆச்சர்யமாக உள்ளது. எனது குழந்தைக்கு இந்த மாணவி ஆசிரியையாக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.

அந்த சிறுமியின் மதம் குறித்த எண்ணம் எனக்கோ மற்ற சிறுமிகளின் பெற்றோர்களுக்கோ வரவில்லை எனக்கூறினார்.பூஜா குஷ்வாகா கூறுகையில் பல வருடங்களுக்கு முன் முஸ்லிம் தந்தைக்கும் இந்து மதத்தை சேர்ந்த தாயாருக்கும் பிறந்த சங்கீதா பேகம் என்ற பெண் குழந்தைகளுக்கு குரான் கற்பித்து வந்தார்.

இதில் ஆர்வமடைந்த நான் அந்த வகுப்பில் கலந்து கொண்டேன். அதில் குரானை மற்றவர்களை விட நன்கு கற்றுக்கொண்டேன் எனக்கூறினார்.சில குறிப்பிட்ட காரணங்களால் சங்கீதா பேகத்தால் குரான் வகுப்பை தொடர முடியவில்லை. இதனையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் பூஜா குஷ்வாகா குரான் வகுப்புகளை தொடங்கினார்.

பூஜா தொடர்ந்து கூறுகையில் என்னிடம் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் கொடுக்க பணம் இல்லை. நானும் பணம் வாங்க விரும்பவில்லை. குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வீட்டில் போதிய இடம் இல்லாத காரணத்தினால் பெரியவர்களின் ஆலோசனைப்படி கோவில் இடத்தில் கற்பித்து வருகிறேன் என்றார்.

பூஜாவின் மூத்த சகோதரியும் அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு இந்தி மற்றும் பகவத் கீதை கற்பித்து வருகிறார். 70 வயதாகும் இஸ்லாம் மத தலைவர் ஒருவர் கூறுகையில் இந்த நகரில் சமூக நல்லிணக்கத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு ஆசிரியர் என்பவர் ஆசிரியரே.

அதில் அவரது மதம் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது. யாராவது அரபிக் மொழி கற்பதையோ குரான் வாசிப்பதையோ இஸ்லாம் மதம் எதிர்க்கவில்லை என்றார்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top