Mohammed Farook Mohammed Farook Author
Title: அமீரகத்தில் மீண்டும் தலைதூக்கும் போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் !
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அமீரகத்தில் மீண்டும் போலி வேலை வாய்ப்பு நிறுவனங்கள் புதிய இரைகளை நோக்கி தங்கள் வலையை வீசுவதை கல்ஃப் நியூஸின் News Xpress புலனாய்வு குழு ...
அமீரகத்தில் மீண்டும் போலி வேலை வாய்ப்பு நிறுவனங்கள் புதிய இரைகளை நோக்கி தங்கள் வலையை வீசுவதை கல்ஃப் நியூஸின் News Xpress புலனாய்வு குழு வெளிப்படுத்தியுள்ளது, இவர்கள் ஏற்கனவே 2011 ஆம் ஆண்டும் இதுபோன்ற ஸ்டிங் ஆபரேசன் நடத்தி இத்தகைய மோசடிகளை வெளிப்படுத்தியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பழைய உத்தியை மீண்டும் கையிலெடுத்துள்ள போலி நிறுவனங்கள் முதலில் 320 திர்ஹத்தை செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் ஒரு வாரத்தில் வேலையை கண்டிப்பாக பெற்றுத் தருவதாகவும் அடித்து விடுகின்றனர்.

இந்த போலிகளின் வாக்குறுதியை நம்பி நேர்முகத் தேர்வுக்குச் சென்றால், அந்த நேர்முகத் தேர்வு ஊடகங்களில் நிறுவனங்களால் ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டு நேரடியாக நடத்தப்பெறும் ஒன்றாக இருக்கும். இந்த நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு போலி ஏஜென்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

சிலவேளை அவர்களே பிற நிறுவனங்களில் பணியாற்றும் தெரிந்தவர்கள் மூலம் ஏற்படுத்தும் போலி நேர்முகத் தேர்வுகளையும் ஒப்புக்காக நடத்தி 320 திர்ஹம் முன்பதிவு கட்டணம் செலுத்திய ஏமாளிகளை நிராகரிக்கின்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

மேலும், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்காவிட்டால் பதிவுக் கட்டணமாக செலுத்திய 320 திர்ஹம் திரும்பத் தரப்படும் என வேறு அவிழ்த்து விடுகின்றனர். இந்த தந்திரங்கள் அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு அரசால் நசுக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தொழிலாளர் நல அமைச்சகம், இதுபோன்று வேலைவாய்ப்பு பதிவு கட்டணங்கள், கமிஷன்கள் என எந்த வடிவில் பெற்றாலும் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top