vkrnajur vkrnajur Author
Title: அமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்க கழிவறை: பொது பயன்பாட்டுக்கு திறப்பு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அமெரிக்காவில் உள்ள அருங் காட்சியகத்தில் நிர்மாணிக்கப் பட்டுள்ள 18 கேரட் தங்க கழிவறை பொது பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அந்த கழ...
அமெரிக்காவில் உள்ள அருங் காட்சியகத்தில் நிர்மாணிக்கப் பட்டுள்ள 18 கேரட் தங்க கழிவறை பொது பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அந்த கழி வறையை காண்பதற்காக தற் போது அருங்காட்சியகத்தில் கூட்டம் அலைமோதுவதாக கூறப் படுகிறது.

நியூயார்க் நகரில் ககன்ஹேம் அருங்காட்சியகம் உள்ளது. இதன் நான்காவது மாடியில் உள்ள பொது கழிவறையில், வழக்கமான கழிவறை நீக்கப்பட்டு 18 கேரட் தங்கத்தில் உருவாக்கப்பட்ட கழிவறை சில மாதங்களுக்கு முன் நிறுவப்பட்டது. 

இத்தாலிய கலைஞர் மவுரிசியோ கேட்டலன் பணியில் இருந்து ஓய்வு பெறும் முன் தனது இறுதி படைப்பாக இதனை உருவாக்கியிருந்தார். கழிவறை நிர்மாணிக்கப்பட்டதும் அதனை பார்வையிடுவதற்கு மட்டும் பார்வையாளர்கள் அனு மதிக்கப்பட்டனர். 

இந்த சூழலில் இந்த கழிவறையை பொது பயன்பாட்டுக்கும் அருங் காட்சியகம் திறந்துவிட்டுள்ளது. இதனால் அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top