Mohamed Farook Mohamed Farook Author
Title: ஈரானியர்கள் முஸ்லிம்கள் இல்லை - சவூதி பத்வா
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஈரானியர் ‘முஸ்லிம்கள் இல்லை’ என்று சவூதி அரேபியாவின் தலைமை முப்தி அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் கடமையை சவூதி அரேபியா ...
ஈரானியர் ‘முஸ்லிம்கள் இல்லை’ என்று சவூதி அரேபியாவின் தலைமை முப்தி அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் கடமையை சவூதி அரேபியா நிர்வகிப்பது குறித்து ஈரான் உயர்மட்ட தலைவர் கண்டனம் வெளியிட்ட அடுத்த தினமே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆயதுல்லாஹ் அலி கமெனியின் குற்றச்சாட்டுகள் குறித்து அதிர்ச்சி அடையவில்லை என்று அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் மாஹியின் புதல்வர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாத்திற்கு முன்னர் ஈரானில் ஆதிக்கம் செலுத்திய சொரொஸ்ட்ரியனிஸம் மதத்தையே இதன்போது அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த ஆண்டின் புனித ஹஜ் கடமை ஆரம்பிக்கும் தருணத்திலேயே பிராந்தியத்தின் ஷியா சுன்னி எதிரி நாடுகளுக்கு இடையிலான மோதல் வலுப்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஹஜ் கடமையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய யாத்திரிகர்களை சவூதி நிர்வாகமே கொலை செய்ததாக ஆயதுல்லாஹ் அலி கமனெய் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த சனநெரிசலில் 2426 பேர் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வமற்ற கணக்குகள் குறிப்பிடுகின்றன. எனினும் இந்த அனர்த்தத்தில் 769 பேரே கொல்லப்பட்டதாக சவூதி நிர்வாகம் குறிப்பிடுகிறது.

கமெனியின் கருத்து குறித்து அல் ஷெய்க் மக்கா பத்திரிகைக்கு பதிலளித்துள்ளார். அதில் “அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மாஹியின் புதல்வர்கள். அவர்கள் முஸ்லிம்கள் மீது பாரம்பரியமாக விரோதப்போக்கு கொண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சவூதியின் ஆளும் குடும்பம் பின்பற்றும் வாஹ்ஹாபிய கொள்கை ஆதரவாளர்கள் உட்பட கடும்போக்கு சுன்னிக்கள் ஷியாக்களை “நிராகரிப்பாளர்” என்றே கருதி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top