vkrnajur vkrnajur Author
Title: உலகில் 90% மக்கள் அசுத்தக் காற்றை சுவாசிக்கின்றனர்: உலக சுகாதார நிறுவனம் தகவல் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உலகில் 90 சதவீத மக்கள் மாசடைந்த காற்றைச் சுவாசிக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டு உலக சுகா...
உலகில் 90 சதவீத மக்கள் மாசடைந்த காற்றைச் சுவாசிக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டு உலக சுகாதார நிறுவன பொதுசுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தலைவர் மரியா நெய்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காற்று மாசுபாடு மிகுந்த கவலைக்குரிய ஒன்று. வளர்ந்த நாடுகளை விட ஏழை நாடுகளில் காற்று மிகவும் அசுத்தமடைந்துள்ளது. ஆனால், காற்று மாசுபாடு அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. காற்று மாசுபாடு நகரங்களில் அதிகம். கிராமங்களில் அதை விட மோசம். சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். தவிர, கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதுடன், சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளையும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும்.

உலகம் முழுவதும் 3,000 நகரங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், 92 சதவீத மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள காற்றின் தரம் உலக சுகாதார மையம் நிர்ணயித்த வரம்பை விட மோசமாக உள்ளது.
காற்றுமாசுபாடு காரணமாக ஏற்படும் இறப்புகளில் 90 சதவீதம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளில் நிகழ்கின்றன.

தெற்காசியா, சீனா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட மேற்கு பசிபிக் பிராந்தியங்களில் காற்றுமாசுபாடு மிக மோசமாக உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top