Mohamed Farook Mohamed Farook Author
Title: இரவு 7 மணிக்கு பிறகு சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படலாம்: புதிய ஆய்வறிக்கை.
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இரவு 7 மணிக்கு பிறகு சாப்பிடும் நபர்களுக்கு விரைவில் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக புதிதாக எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவ...
இரவு 7 மணிக்கு பிறகு சாப்பிடும் நபர்களுக்கு விரைவில் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக புதிதாக எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

துருக்கி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் 700 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில், இரவு 7 மணிக்கு பிறகு உணவு சாப்பிடும் நபர்களுக்கு எளிதில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குள் தூங்கும் நபர்களுக்கு இதயம் தொடர்பான பிற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
 
இரவு உணவு அருந்தியதற்கு பின்னர் தூங்கும்போது நமது இரத்த அழுத்தமானது 10 சதவிகிதம் அளவிற்கு குறைய வேண்டும்.
ஆனால், 7 மணிக்கு பிறகு சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரம் இடைவெளி இல்லாமல் உடனடியாக படுக்கைக்கு செல்லும் நபர்களுக்கு இரத்த அழுத்தம் குறையாதது தெரியவந்துள்ளது.
 
மேலும், இரவில் தாமதமாக உணவு சாப்பிடும் நபர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலை தொடர்ந்தால், அவர்கள் எளிதில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top