Mohamed Farook Mohamed Farook Author
Title: 50 கோடி பேரின் அந்தரங்க தகவல்கள் திருட்டு: யாஹூ நிறுவனம் ஒப்புதல்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
புகழ்பெற்ற இணைய சேவை நிறுவனமான யாஹூவில் கணக்கு வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விபரத்தை அந்நிறுவன...
புகழ்பெற்ற இணைய சேவை நிறுவனமான யாஹூவில் கணக்கு வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விபரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற இணைய சேவை நிறுவனங்களில் யாஹூவும் ஒன்று. இந்நிறுவனம் மூலம் பலர் மின்னஞ்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயனப்டுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்ற விபரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

யாஹூவின் தகவல் சேகரிப்பு மையத்தில் இணைய தகவல் திருடர்கள் செய்த தொழில்நுட்ப திருட்டு ஒன்றை விசாரிக்கும் போதுதான் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய பாதுகாப்பபு குறைபாட்டு பிரச்சினையாக கருதப்படும் இதை குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் செய்து இருக்கலாம் என்று யாஹூ கருத்து தெரிவித்துள்ளது.

திருடப்பட்ட தகவல்களில் பயனாளர்களின் கணக்கை சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் பயனாளர்களின் பெயர் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண்கள் பிறந்த தேதி கடவுச் சொற்கள் மற்றும் பாதுகாப்பு கேள்விகள் மற்றும் பதில்கள் ஆகிய விபரங்கள்  அடங்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top