vkrnajur vkrnajur Author
Title: பேஸ்புக்கால் 4 கோடி பேர் மரணம் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மத்தியில் மிகவும் பிரபலமானதும் அதிகளவானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக பேஷ்புக் இருந்த...
உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மத்தியில் மிகவும் பிரபலமானதும் அதிகளவானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக பேஷ்புக் இருந்து வருகிறது.

பேஷ்புக் சமூக வலைத்தளத்தை அறியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஷ்புக் சமூக வலைத்தளத்தை தற்போது உலக முழுவதும் 150 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

தினமும் 115 கோடி பேர் பேஷ்புக் வலைத்தளத்திற்குள் வந்து செல்கின்றனர்.

எவ்வாறாயினும் 2004ம் ஆண்டு முதல் இதுவரை பேஷ்புக் வலைத்தளத்தை பயன்படுத்திய சுமார் 4 கோடி பேர் மரணமடைந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ஒரு மணித்தியாலத்திற்கு பேஷ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் 428 பேரில் ஒருவர் மரணிப்பதாகவும் தினமும் 10 ஆயிரத்து 273 பேர் இறப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனடிப்படையில், ஒரு மாதத்தில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 500 இறப்பதாக கூறப்படுகிறது.இந்த இறப்பு வீதம் காரணமாக 2065ம் ஆண்டளவில் உலகில் பேஷ்புக் வலைத்தளத்தை பயன்படுத்துவோரை விட இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2065ம் ஆண்டில் உலகில் மிகப் பெரிய மரண நினைவுச் சின்ன இணைப்புகள் பேஷ்புக்கில் குவியும் என கூறப்படுகிறது.

தரவுகளை அழிக்காது அப்படியே வைத்திருப்பது என பேஷ்புக் நிறுவனம் எடுத்துள்ள தீர்மானமே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

சில மரணங்களுடன் பேஷ்புக் சமூக வலைத்தளம் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது.

பேஷ்புக் ஊடாக ஏற்படும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு போவது மற்றும் பேஷ்புக் ஊடாக நடக்கும் குற்றச் செயல்கள் இந்த மரணங்களுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வு நடத்திய குழு ஒன்று கண்டறிந்துள்ளது

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top