Mohamed Farook Mohamed Farook Author
Title: ஜியோவை எதிர்கொள்ள சிறப்பு 4ஜி டேட்டா பேக் திட்டத்தை அறிவித்த ஏர்டெல்.!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை அறிவித்த நாள் முதல் ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் பல்வேறு விதங்களில், புதுப்புது திட்டங்களையும...
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை அறிவித்த நாள் முதல் ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் பல்வேறு விதங்களில், புதுப்புது திட்டங்களையும், பழைய திட்டங்களை விலையைக் குறைப்பதுமாக இருக்கின்றன.

தினமும் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வெள்ளிக் கிழமை சிறப்பிக்க ஏர்டெல் களத்தில் இறங்கியுள்ளது

பாரதி ஏர்டெல் நிறுவனம் சிறப்பு 4ஜி டேட்டா பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் அதாவது மூன்று மாதங்களுக்கு இருக்கும்.

விலை


புதிய 4ஜி டேட்டா பேக் கட்டணம் ரூ.1,495 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை பழைய பயனர்களுக்கும், புதிய பயனர்கள் தங்களது முதல் ரீசார்ஜ் ரூ.1,494 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பயன்பாடு
சிறப்பு 4ஜி டேட்டா பேக் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவு டேட்டா அதிவேகமாகவும், குறிப்பிட்ட அளவினை பயன்படுத்தியதும் டேட்டா வேகம் குறைக்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

அளவு

அதன் படி 30 ஜிபி டேட்டாவினை 90 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும். 30 ஜிபி அளவு 90 நாட்களுக்குள் பயன்படுத்திய பின் 4ஜி வேகம் 2ஜியாக குறைக்கப்பட்டு விடும்.

ஏர்டெல்

முன்பு அறிவிக்கப்பட்டதைப் போன்று ஏர்டெல் சிறப்பு 4ஜி டேட்டா பேக் திட்டத்திலும் பயனர்கள் 1 ஜிபி 4ஜி டேட்டாவினை ரூ.50க்கு பெற முடியும். இதோடு 90 நட்களுக்கு அன்-லிமிட்டெட் 2ஜி டேட்டாவும் வழங்கப்படுகின்றது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ


இதுவே ரிலையன்ஸ் ஜியோவில் ரூ.1,499 செலுத்தும் போது 20 ஜிபி மட்டுமே வழங்கப்படுகின்றது. இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இதனால் 1ஜிபி 4ஜி டேட்டாவிற்கு ரூ.75 வரை வசூலிக்கப்படுகின்றது.

தில்லி

தற்சமயம் தில்லியில் மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் விரைவில் மற்ற நகரங்களிலும் வழங்கப்படும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமும் ரிலையன்ஸ் ஜியோ போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top