Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் அடுத்த 4 நாட்களுக்கு கடுமையான வெப்பம் நிலவும்.
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் கடந்த சில நாட்களாக மழையும், வெயிலும் மாறி மாறி இருந்து வந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கடுமையான வெப்பம் தமிழகத்தில் நிலவ...
வி.களத்தூரில் கடந்த சில நாட்களாக மழையும், வெயிலும் மாறி மாறி இருந்து வந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கடுமையான வெப்பம் தமிழகத்தில் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் கூறுகையில், தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பெய்யாததால், செப்டம்பர் மாதத்தில் கடுமையான வெயில் நீடிக்கிறது. இதே நிலை அடுத்த 4 நாட்களுக்கு நீடிக்கும். அடுத்து வரும் 4 நாட்களும் கடுமையாக வெயில் கொளுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

வழக்கமாக தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் இறுதி வாரம் வரை இருக்கும்.

தமிழகத்துக்கு தென்மேற்கு பருவ மழையால் கிடைக்கும் மழை குறைவு தான் என்றாலும், ஓரளவுக்கு பெய்யும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரம் வரையிலும் போதிய மழை பெய்யாததால், கத்திரி வெயில் போல சுட்டெரிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top