Mohamed Farook Mohamed Farook Author
Title: பக்ரீத் முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆடு சந்தை நடைபெற்று வருகிறது. இதில் பக்ரீத், தீபாவளி, ரம்ஜான் உள்...
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆடு சந்தை நடைபெற்று வருகிறது. இதில் பக்ரீத், தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிக அளவு ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.

இதில் பக்ரீத் பண்டிகை என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்படுகிறது. இந்த பண்டிகையில் குர்பானி கொடுப்பது வழக்கம் என்பதால் நேற்று உளுந்தூர் பேட்டை ஆடு சந்தையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டனர்.

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் மட்டு மின்றி திருச்சி, பெரம்பலூர், சேலம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல் வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்காக லாரி, மினிடெம்போ உள்ளிட்ட வாகனங்களுடன் ஆடு சந்தையில் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து வியாபாரிகள் கூறிய போது, அடுத்த வாரம் 13ம் தேதி பக்ரீத் பண் டிகை வருவதால் இந்த வாரம் தான் கடைசி சந்தை அதனால் தான் அதிக அளவு கூட்டம் உள்ளது. ஒரு ஆட்டின் விலை ரூ 5 ஆயிரத்தில் இருந்து ரூ 25 ஆயிரம் வரையில் விற்பனை ஆனது.

நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாக இருக்கலாம் என தெரிவித்தனர். ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் அதிக அளவு வாகனங்களில் வந்ததால் சேலம் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆடு சந்தை வழக்கமாக நடை பெறும் இடத்தில் இருந்து மாற்றி பெரிய ஏரி பகுதி யில் சந்தை நடை பெற்றது.,

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top