Mohamed Farook Mohamed Farook Author
Title: பிறந்தது முதல் 12 மாதம் வரை: குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பிறந்த குழந்தைகளுக்கு உடை அலங்காரம் போன்றவற்றை செய்து பார்ப்பதற்கு பதிலாக அவர்களின் உணவு வகைகளில் அதிக கவனம் செலுத்தினால் அவர்கள் எதிர்...
பிறந்த குழந்தைகளுக்கு உடை அலங்காரம் போன்றவற்றை செய்து பார்ப்பதற்கு பதிலாக அவர்களின் உணவு வகைகளில் அதிக கவனம் செலுத்தினால் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும். அவர்களின் வளர்ச்சிக்கேற்ப மாதந்தோறும் உணவு முறைகளில் மாற்றம் ஏற்படுத்தினால் சிறப்பு.
0-4 மாதம் வரை
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலே அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். தாய்ப்பாலில் அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்திருப்பதோடு, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.
அதோடு பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் கிருமியை வெளியேற்றும். 

குழந்தைகளின் உறுப்புகள் அனைத்தும் வலுவடையவும், செரிமான மண்டலம் நன்கு செயல்பட தாய்ப்பாலை நான்கு மாதங்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
4-6 மாதம் வரை
நான்கு மாதத்திற்கு பிறகு குழந்தைகள் தாய்ப்பால் தவிர வேறு உணவுகளில் கவனம் செலுத்துவார்கள். அப்போது ஒரு ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்கலாம்.

ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை தாய்ப்பால் குடித்தும் குழந்தைகள் பசிக்காக அழுதால் இந்த உணவுகளை தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு கொடுக்கலாம், அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன்.
6-8 மாதம் வரை
தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போது, வேகவைத்த மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்றவற்றை கொடுக்கலாம். இதுபோன்ற உணவுகள் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுகிறதா என்பதை கவனித்து கொள்ள வேண்டும்.
8-10 மாதம் வரை
சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ், புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றை கொடுக்கலாம்.
10-12 மாதம் வரை
இந்த மாதத்தில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம், ஆனால் அளவாக கொடுக்க வேண்டும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top