Mohamed Farook Mohamed Farook Author
Title: கடந்த 10 ஆண்டுகளில் இம்முறையே ஹாஜிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி - சவூதி புள்ளிவிபரம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இம்முறை ஹஜ் கடமையில் 54.6 வீத ஆண் மற்றும் 45.4 வீத பெண் வெளிநாட்டு யாத்திரிகர்கள் பங்கேற்றதாக ஹஜ் கடமை தொடர்பில் சவூதி அரேபிய நிர்வாகம் ...
இம்முறை ஹஜ் கடமையில் 54.6 வீத ஆண் மற்றும் 45.4 வீத பெண் வெளிநாட்டு யாத்திரிகர்கள் பங்கேற்றதாக ஹஜ் கடமை தொடர்பில் சவூதி அரேபிய நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விபரம் காட்டுகிறது.

இதில் பெரும்பாலான ஹஜ் யாத்திரிகர்கள் விமானத்தின் ஊடாகவே ஹஜ் கடமைக்கு வந்துள்ளனர். இவ்வாறு 94 வீதமான யாத்திரிகர்கள் விமானத்தை பயன்டுத்தியுள்ளனர். 5 வீதமானவர்கள் மாத்திரமே தரை வழியாக எல்லையை கடந்தும் ஒரு வீதத்தினர் கடல் மார்க்கமாகவும் ஹஜ் கடமைக்கு வந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஹஜ் யாத்திரிகர்களில் இம்முறை வீழ்ச்சி கண்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் 1.7 மில்லியன் வெளிநாட்டினர் மற்றும் 746511 உள்நாட்டினர் ஹஜ் கடமையில் பங்கேற்றதன் மூலம் அந்த ஆண்டில் 2.4 மில்லியன் பேர் ஹஜ் கடமையில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும் இந்த ஆண்டில் 1325372 வெளிநாட்டினர் மற்றும் 537537 உள்நாட்டினர் ஹஜ் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டு ஹஜ் கடமையில் ஈடுபட்டோரின் மொத்த எண்ணிக்கை 1862909 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் இதுவே ஹஜ் கடமையில் பங்கேற்ற மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.

எனினும் 2012 ஆம் ஆண்டு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் ஹஜ்ஜில் பங்கேற்றதே கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகும். இந்த ஆண்டில் சவூதி அரேபியாவில் இருந்து ஹஜ் கடமையில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகளில் எகிப்தியரே அதிகமாகும்.

அதனை அடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்திய நாட்டவர்கள் உள்ளனர். ஹஜ் கடமையை ஒட்டி மக்கா நுழைவாயில்கள் ஊடாக பெறப்பட்ட தரவுகளை மற்றும் ஏனைய விபரங்கள் கொண்டே இந்த புள்ளி விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top