Mohamed Farook Mohamed Farook Author
Title: அமீரகத்தில் அக்.1 முதல் மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றம் !
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கடந்த ஓர் ஆண்டாக கச்சா எண்ணெயின் விலை அதலபாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து வளைகுடா நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந...
கடந்த ஓர் ஆண்டாக கச்சா எண்ணெயின் விலை அதலபாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து வளைகுடா நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன, மேலும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்ற மாதம் சில காசுகளை விலையேற்றிய அமீரகம் வரும் அக்டோபர் மாதத்திற்கான விலையேற்றம் குறித்து அறிவித்துள்ளது. அதன்படி லிட்டர் ஒன்றுக்கு கீழ்க்காணும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன,

சூப்பர் 98 – 1.75 திர்ஹத்திலிருந்து 1.81 திர்ஹம் - ஏற்றம் 6 காசுகள்

சூப்பர் 95 – 1.64 திர்ஹத்திலிருந்து 1.70 திர்ஹம் - ஏற்றம் 6 காசுகள்

ஈ பிளஸ் 91 – 1.57 திர்ஹத்திலிருந்து 1.63 திர்ஹம் - ஏற்றம் 6 காசுகள்

டீசல் - 1.72 திர்ஹத்திலிருந்து 1.76 திர்ஹம் - ஏற்றம் 4 காசுகள்

புதன் அன்று நடைபெற்ற ஒபெக் நாடுகளின் (OPEC - Organisation of Petroleum Exporting Countries) முடிவின்படி தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்ததை தொடர்ந்து பேரலுக்கு சுமார் 5 சதவிகிதம் உயர்வு கண்டது அதாவது பேரல் 46.80 டாலருக்கு விற்ற கச்சா எண்ணெய் 48 டாலராக சற்றே உயர்வு பெற்றது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top