"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/8/16

சவுதி அரசு நேற்று வெளியிட்டுள்ள தகவல் படி விசா கட்டணத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதன் படி விடுப்பில் செல்பவர்களுக்கு 200 ரியால் இரண்டு மாதம், கூடுதல் ஒவ்வொரு மாதத்திற்கும் தலா 100 ரியால் விதம் வசூலிக்கப்படும். உதாரணமாக 6 மாதத்திற்கு 600 ரியால் செலுத்த வேண்டும், முன்பு 6 மாதம் வரை 200 ரியால் வசூலிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த வருடம் முதல் நிலவும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சவூதி அரேபியவின் வருடாந்திர பட்ஜெட்டில் சுமார் 100 மில்லியன் டாலர் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சமாளிக்கும் விதமாக விசா கட்டணங்களிலும் சில போக்குவரத்து விதிமீறல் அபராதங்களையும் ஏற்ற அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.

இதன்படி 2 வருட பல்நுழைவு (Multiple Entry) விசாவிற்கு சுமார் 8,000 ரியால்களும், 3 மாத பல்நுழைவு விசாவிற்கு 500 ரியால்களும் நிர்ணயிக்கப்பட உள்ளன. இந்த 500 ரியால் கட்டணம் என்பது முன்பு 6 மாத பல்நுழைவு விசாவிற்கு வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிவில் விமான போக்குவரத்து கட்டணத்தை கூட்டவும், சாகச பிரியர்களான சவூதியர்கள் கார் சறுக்கல் (Drifting) விளையாட்டில் ஈடுபட்டு பிடிபட்டால் அபராதம் வசூலிக்கவும் அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

இந்த விசா விலையேற்றங்கள் வியாபார நிமித்தமாக சவூதி செல்பவர்களையும், சவூதியில் குடும்பத்துடன் வாழும் சுமார் 10 மில்லியன் வெளிநாட்டினரையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.