காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றும் யோசனை இல்லை: மத்திய அரசு விளக்கம்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் யோசனை ஏதும் இல்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்க...
ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் யோசனை ஏதும் இல்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பதிலளித்த நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுவது அல்லது வேறு தலைவர்களின் படங்களைச் சேர்ப்பது குறித்து உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. காந்தி படத்தை மாற்ற வேண்டாம் என்றும் வேறு தலைவர்களின் படத்தை சேர்க்க வேண்டாம் என்று அக்குழு பரிந்துரைத்தது.
அதன்படியே ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்ற வேண்டாம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

எந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு முடிவெடுத்து வருகிறது. அதேபோல கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாத அளவுக்கு ரூபாய் நோட்டுகளைத் தனித்துவத்துடன் வடிவமைப்பது குறித்தும் ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அவரது உருவப்படம் பொறித்த 10 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளார். எனவே, அவரது படத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடும் திட்டமில்லை. 10 ரூபாய் நாணயத்துக்கு தேவை அதிகம் உள்ளது. இனி புதிதாக அதிக அளவில் அம்பேத்கர் படம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்படும் என்றார்.
பிளாஸ்டிக் கரன்ஸி வெளியிடப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “சோதனை முறையில் பிளாஸ்டிக் கரன்ஸிகளை அச்சிடுவதற்கான பொருள்களை வாங்குவதற்காக ஒப்பந்தப் புள்ளி கோர ஆர்பிஐ முடிவு செய்துள்ளது’ என்றார்.

காங்கிரஸ் எம்.பி.யின் கோரிக்கை: மாநிலங்களவையில் ஆர்பிஐ ஆளுநர் பதவி குறித்து செவ்வாய்க்கிழமை பேசிய காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா, “சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் மத்திய வங்கியின் தலைவர் பதவிக் காலம் சராசரியாக 5 முதல் 6 ஆண்டுகளாக உள்ளது. இந்தியாவில் இப்போது ஆர்பிஐ ஆளுநர் பதவிக் காலம் 3 ஆண்டுகளாக உள்ளது. இதனை 4 ஆண்டுகள் என்று நிர்ணயித்தால் சிறப்பாக இருக்கும்’ என்றார்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top