"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/8/16

ஒலிம்பிக் போட்டிகளின் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்பதற்காக 17 நாடுகளைச் சேர்ந்த வீரர்களை கத்தார் நாடு அனுப்பியுள்ளது. எண்ணெய் வளமிக்க கத்தாரில் பெரும்பாலான வெளிநாட்டினரே வசித்துவருகின்றனர்.

மேலும் வர்த்தக நடவடிக்கைகளையே அதிகம் நம்பியிருக்கும் அந்த நாட்டில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால் ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுத் திருவிழாவில் தங்கள் நாட்டை முன்னிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால் மற்ற நாடுகளின் வீரர்களின்பால் கத்தாரின் கவனம் திரும்பியுள்ளது.

இதற்காக மற்ற நாடுகளில் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்துள்ள வீரர்களை தங்கள் நாட்டின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும்படியான ஏற்பாடுகளை கத்தார் செய்துள்ளது.

அதன்படி உலகின் 5 கண்டங்களைச் சேர்ந்த 17 நாடுகளின் வீரர்களை அந்த நாடு ஒப்பந்தம் செய்துள்ளது. சூடானில் இருந்து தடகள வீரர்கள் ஜேர்மனியில் இருந்து குத்துச் சண்டை வீரர்கள் பிரேசிலில் இருந்து பீச் வாலிபால் வீரர்கள் மற்றும் சீனாவில் இருந்து டேபிள் டென்னிஸ் வீரர் உள்ளிட்டோர் நடப்பு ரியோ ஒலிம்பிக் போட்டியில் கத்தார் சார்பில் பங்கேற்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.