"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
9/8/16

ஒலிம்பிக்கில் தனது பேரன் வெண்கலப் பதக்கம் வென்றதால் அதீத மகிழ்ச்சி அடைந்த பாட்டி, உற்சாக மிகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக மரணமடைந்தார்.
தாய்லாந்தைச் சேர்ந்தவர் 20 வயதான சின்பெட் குரூய்தாங். இவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 56 கிலோ எடைப் பிரிவு பளு தூக்குதலில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்தத் தகவலை பாங்காக்கில் உள்ள அவரது வீட்டினர் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக சின்பெட்டின் பாட்டிக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. பேரனுக்கு வெண்கலம் கிடைத்து விட்டது என்று உற்சாகமடைந்தார் அவர். அந்தக் கொண்டாட்டத்தின்போது திடீரென அவர் மயங்க விழுந்தார். அவரை உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் சென்றனர்.
ஆனால் பாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதீத உற்சாகத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் டாக்டர்கள் கூறினர். இதனால் சந்தோஷத்தில் இருந்த குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
84 வயதான பாட்டி சுபின் கோங்காப் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாகவே, தனது பேரன் நிச்சயம் பதக்கம் வெல்வான் என்று கூறியபடி இருந்தாராம். கடைசியில் பேரனை பதக்கத்துடன் பார்க்க முடியாமல் போய்ச் சேர்ந்து விட்டார் பாட்டி.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.