காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: அல்லாஹ் என்று சொன்னதற்காக விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட அமெரிக்கா முஸ்லிம் தம்பதிகள்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அமெரிக்காவில் மற்றுமொரு இஸ்லாமோஃபோபியா சம்பவம்!. அமெரிக்க விமானமான டெல்டா விமானத்தில் இருந்து கடந்த ஜூலை 26ந்தேதி ஃபைசல்-நாஸியா தம்பதி...
அமெரிக்காவில் மற்றுமொரு இஸ்லாமோஃபோபியா சம்பவம்!.
அமெரிக்க விமானமான டெல்டா விமானத்தில் இருந்து கடந்த ஜூலை 26ந்தேதி ஃபைசல்-நாஸியா தம்பதியினர் தக்க காரணமின்றி வெளியேற்றப்பட்டனர். அமெரிக்கக்குடியுரிமை பெற்ற இத்தம்பதி தங்கள் பத்தாவது திருமண நாளை பாரீஸில் கொண்டாடிவிட்டு ஒஹியோவின் சின்சினாட்டியில் தம் வீட்டிறகுச் செல்ல டெல்டா விமானத்தில் பயணப்பட்டனர்.

விமானம் கிளம்ப சிறிது நேரம் இருக்கும் போது விமான ஊழியர் ஒருவர் ஃபைசல்-நாஸியாவை வெளியேறுமாறும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். அதிர்ந்த தம்பதியினர் காரணத்தைக் கேட்க விமானப்பணிப்பெண் ஒருவர் அவர்களது இருப்பால் சங்கடமாக உணர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்தம்பதியினர் அல்லாஹ் என்று கூறியதால் விமான ஓட்டி அவர்கள் வெளியறாதவரை விமானத்தைச் செலுத்துவதில்லை என்றும் குடைச்சல் கொடுத்தார். இதனால் வேறை வழியின்றி அத்தம்பதி விமானத்தில் இருந்து வெளியேறினர்.

அவர்களிடம் விசாரித்த அதிகாரி சந்தேகப்படும்படியான எந்தத் தகவலோ செயலோ அத்தம்பதியினரிடம் தென்படவில்லை எனத் தன் அறிக்கையில் தெரிவித்தார். அத்தம்பதியினருக்குத் தங்குவதற்கு ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டு வேறு விமானத்தில் பின்பு பயணம் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து ஃபைசல்-நாஸியா இருவரும் ” விமானப்பணியாளர்களுக்குப் பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பிக்கப்பட வேண்டும். அமெரிக்கப் போக்குவரத்துத்துறையிடம் டெல்டா விமானம் உள்பட அமெரிக்க விமான சேவைகளின் விதிமுறைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர்களின் சட்டவிதிமீறல்களின் மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது்” என்றன்ர்.

இது குறித்து டெல்டா விமான அதிகாரிகள் கூறுகையில்: டெல்டா விமானத்திற்கு எந்த இன, மத பாகுபாடும் கிடையாது. அனைத்து பயணிகளின் பாத்காப்பும் எங்களுக்கு அவசியம. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வோம் என்று கூறினர்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top