"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/8/16

😃 கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“
மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?
கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?
கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“
மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃கணவன் – “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல வந்து இறங்கிறே….!
மனைவி – “நீங்க தானே சொன்னீங்க…. பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?
மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃மனைவி – “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா…. நீங்க பேசாம நிக்கிறீங்களே….“
கணவன் – “திரும்பி வரட்டும்…. பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃 கணவன் : “உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?”
மனைவி : “நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்.”
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃 மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?
கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே!
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ?
மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க.
கணவன் : எனக்கு மறந்து போச்சு.
மனைவி : இது கூடவா ?
கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ?
மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா? தினமும் STD போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு…
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃கணவன் : “உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?”
மனைவி : “உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?”
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃 மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன் : ஒண்ணுமில்ல!
மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.