"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
4/8/16

நீரிழிவு நோய் என்றழைக்கப்படும் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது என்பது அண்மைக்காலங்களில் பேசிவரும் அம்சமாக இருக்கிறது. இதில் அதிர வைக்கும் புள்ளி விவரம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

இதன்படி அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள மாநகரமாக டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது.‌ 40 சதவிகித டெல்லிவாசிகள் சர்க்கரை நோயாளிகளாக உள்ளதாக கூறுகிறது இந்த ஆய்வு.

இந்தியாவில் அதிகரிக்கும் சர்க்கரைநோய் என்ற தலைப்பில் அசோசெம் என்ற அமைப்பு அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‌
ஐடி ஊழியர்கள் உட்பட 18 விதமான தனியார் நிறுவன ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சராசரியாக 500 ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி தலைநகர் டெல்லி, அதிக சர்க்கரை நோயாளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது.

டெல்லி மக்கள் தொகையில் 42 புள்ளி 5 சதவிகிதத்தினர் சர்க்கரை நோயாளிகள் என்கிறது அசோசெம் புள்ளி விவரம். 38 புள்ளி 5 சதவிகித சர்க்கரை நோயாளிகளுடன் மும்பை இரண்டாம் இடத்திலும், 36 சதவிகித நோயாளிகளுடன் அகமதாபாத் 3 ஆவது இடத்திலும் இருக்கிறது.

பெங்களூரின் மொத்த மக்கள் தொகையில் 26 புள்ளி 5 சதவிகிதம் பேர் சர்க்கரை நோயாளிகள் என்றும் 24 புள்ளி 5 சதவிகித சர்க்கரை நோயாளிகளுடன் சென்னை 5 ஆம் இடத்திலும் இருக்கிறது என்கிறது ஆய்வு.
ஹைதராபாத்தில் 22 புள்ளி 6 சதவிகிதம் பேரும், கொல்கத்தாவில் 19 புள்ளி 7 சதவிகிதம் பேரும் என்று ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.

நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்‌களிலும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வியல் முறைகளிலும், உணவுப்பழக்கங்களிலும் மாற்றங்கள் செய்யாவிட்டால் 2035 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பனிரென்டரை கோடியை கடக்கும் என்று எச்சரிக்கிறது இந்த ஆய்வு.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.