Mohamed Farook Mohamed Farook Author
Title: புனித ஹஜ் கடமையில் சைத்தான் மீதுகல் எறியும் நேரம் குறைப்பு
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் பொருட்டு உலகம் முழுவதும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சவ...
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் பொருட்டு உலகம் முழுவதும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சவூதி அரேபியா சென்று கொண்டிருக்கிறார்கள்.



கடந்தாண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு களை முன்னிட்டு, சவூதி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புனித ஹஜ் கடமைகளில் ஒன்றான மினாவில், சைத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியை 12 மணி நேரமாக சவூதி அரசு குறைத்துள்ளது.

ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் மக்காவிலுள்ள புனித கஃபாவிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மினாஎன்ற இடத்தில் சைத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி 3 நாட்கள்  நடைபெறும். சைத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி மினாவில் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்குகிறது.

முதல் நாளில் காலை 6 மணி முதல் காலை 10.30 மணிவரை, புனித பயணிகள் கல் எறிய அனுமதிக்கப்படுவர். 2ம் நாளில் மதியம் 2 மணிமுதல் மாலை 6 மணி வரையும், 3ம் நாளில் காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரையும் கல் எறிய அனுமதிக்கப்படும். 

சைத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே நடைபெறும். இந்த நடைமுறை மூலம் கூட்ட நெரிசல் இல்லாமல் புனித பயணிகள் எளிதாக கல் எறிய முடியும் என சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள கெஜட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top