"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/8/16

இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சை தடை செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கதேச தலைநகர் தாகா மற்றும் சில நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மும்பையில் உள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு மற்றும் வீடியோ தங்களை கவர்ந்ததாக கூறியிருந்தனர்.

இதனையடுத்து ஜாகிர் நாயக் சர்ச்சையில் சிக்கினார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை ஜாகிர் மறுத்ததுடன் பயங்கரவாத செயல்களையும் கண்டித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் ஜாகிர் நாயக் பேச்சு குறித்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து மும்பை போலீசின் சிறப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் ஜாகிர் நாயக்கின் பேச்சு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்தனர்.

இந்த அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தனர். அறிக்கை சமர்பித்ததை மும்பை கூடுதல் கமிஷனர் உறுதி செய்துள்ளார். நாயக்கின் பேச்சுக்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்து மாநில அரசிடம் சமர்பித்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில் ஜாகிர் நாயக் பேச்சை தடை செய்ய வேண்டும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் மற்ற மதத்தினர் குறித்த ஜாகிர் நாயக்கின் பேச்சு பிரச்னைக்குரியது எனவும் அவரது தொண்டு நிறுவனம் இளைஞர்களை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர தூண்டுவது போல் செயல்படுவதாகவும் ஜாகிர் நாயக் மற்றும் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை குறித்து சட்ட ரீதியில் பரிசீலனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.