"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/8/16

தமிழக சட்டசபையிலிருந்து திமுக எம்.எல்.ஏ-க்கள் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினை அவைக் காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய திருப்பூர் தெற்கு எம்எல்ஏ குணசேகரன், நமக்கு நாமே என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் கோட்டையை பிடிக்கமுடியாது என்று குறிப்பிட்டார்.

இதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்கும்படி திமுக எம்எல்ஏ-க்கள் கோரிக்கை விடுத்தனர், ஆனால் சபாநாயகர் இதனை நிராகரித்தார்.
தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் நீண்ட நேரம் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததால் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

மேலும் அனைவரும் வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு உத்தரவிடவே, ஸ்டாலினை குண்டுகட்டாக வெளியேற்றினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திமுக உறுப்பினர்களை எப்படியாவது அவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டே அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பேசுவதாக சரமாரியாக குற்றம்சாட்டினார்.

மேலும் சர்வாதிகார போக்குடன் சபாநாயகர் தனபால் நடந்து கொள்வதாக தெரிவித்த ஸ்டாலின், வரும் 22ம் திகதி காவல்துறை மானியக் கோரிக்கையில் திமுக-வினர் பங்கேற்பதை தடுக்கவே சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.