காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஒலிம்பிக் பார்க்க பா.ஜ.க அமைச்சருக்கு ஒரு கோடி செலவு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஒலிம்பிக் பார்க்க ரியோ செல்லும் அரியானா பா.ஜ.க அமைச்சருக்கு ஒரு கோடி ரூபாய் செலவு: தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பா.ஜ.கவில்  அடுத்த...
ஒலிம்பிக் பார்க்க ரியோ செல்லும் அரியானா பா.ஜ.க அமைச்சருக்கு ஒரு கோடி ரூபாய் செலவு: தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பா.ஜ.கவில்  அடுத்த சர்ச்சை வெடித்தது.
 
பிரேசிலில் உள்ள ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள மத்திய விளையாட்டு துறை பா.ஜ.க அமைச்சர் விஜய் கோயலின் செல்பி  சர்ச்சையை தொடர்ந்து, அரியானா பா.ஜ.க  அமைச்சர், விளையாட்டுக்கு தொடர்பில்லாத 8 பேருடன் ஒரு கோடி ரூபாய் செலவில் அங்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி மத்திய அமைச்சர் விஜய்  கோயல் நடந்து கொண்டதாக ஒலிம்பிக் கமிட்டி குற்றம் சாட்டியது. பாதுகாவலர்களுடன் சண்டை, அனுமதி பெறாதவர்களை உடன் அழைத்து சென்றது, போட்டி  நடைபெறும் இடத்தில் செல்பி என விஜய் கோயலுடன் சென்றவர்களின் நடவடிக்கைகள் ஒலிம்பிக் கமிட்டியை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. 
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அரியானா விளையாட்டு துறை அமைச்சர் அனில் விஜ் தன்னுடன் 8 பேரை அழைத்து கொண்டு ரியோ செல்கிறார்.
இவருடன் பஞ்ச்குலா எம்எல்ஏ ஜியான் சந்த் குப்தா, ரிவாரி எம்எல்ஏ ரன்தீர் சிங், விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கந்தெல்வால், இயக்குனர்  ஜகதீப் சிங், முதல்வரின் மீடியா ஆலோசகர் அமித் ஆர்யா என ஒரு பட்டாளமே செல்கிறது. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்களில் அதிகபட்சமாக  அரியானாவில் இருந்துதான் 11 பெண்கள், 10 ஆண்கள் பங்கேற்கின்றனர். அவர்களை ஊக்குவிக்கச் செல்வதாக அனில் விஜ் கூறியுள்ளார். அவர் கூறுகையில்,  ‘‘எங்களது மாநில வீரர்களை ஊக்குவிப்பதற்காக செல்கிறோம். 
அதற்காக மற்ற மாநில வீரர்களை கவனிக்க மாட்டோம் என்று இதற்கு அர்த்தமல்ல. எனவே, எங்களது பயணம் நமது வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்’’  என்றார். ஆனால், இந்த குழுவினர் செல்வதற்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவிடப்படுவதாகவும், இவர்கள் ஒலிம்பிக் பார்க்க செல்வதற்கு அரசு பணத்தை  வீணடிப்பதா என்று அம்மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒலிம்பிக் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு மட்டுமே ஒருவருக்கு ரூ.90 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுவது  குறிப்பிடத்தக்கது.
thanks - newstig
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top