காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சிறுபான்மையினர் மதம், மொழி, கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் : உச்சநீதிமன்றம் அறிவுரை
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
பெரும்பான்மையினரைப் போல், சிறுபான்மையினரும் இந்த மண்ணின் மைந்தர்கள்  40 ஆண்டுகளுக்கு முந்தய தீர்ப்பை உறுதிச் செய்து  உச்சநீதிமன்றம் அறி...
பெரும்பான்மையினரைப் போல், சிறுபான்மையினரும் இந்த மண்ணின் மைந்தர்கள்  40 ஆண்டுகளுக்கு முந்தய தீர்ப்பை உறுதிச் செய்து  உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி, ஆக.4-
அரசியல் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று 1974-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்தினர் போல் சிறு பான்மை சமூகத்தினரும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்றும், அவர்களுடைய மதம், மொழி, கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

2008-ம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தில் கந்தமால் என்ற இடத்தில் நடந்த கலவர வழக்குகளில் ஈடுபட்டவர்களில் குறைந்த அளவினருக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் மற்றும் நீதிபதி யு.யு. லலித் ஆகியோர் 40 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1974-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை மேற்கோளாக காட்டி கூறியதாவது-40 ஆண்டுகளுக்கு முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்பில், நாட்டில் பெரும் பான்மை சமூகத்தினரைப் போல் சிறுபான்மை சமூகத் தினரும் இந்த மண்ணின் மைந்தர்கள்தாம். 

எனவே, சிறுபான்மை மக்களின் மதம், மொழி, கலாச்சாரம் தொடர்பான உரிமைகளை பறிக்கக் கூடாது. அவர்களின் மத, மொழி, கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும். அரசியல் சட்டம் ஒரு வழக்கில் வழங்கும் மத, கலாச்சார மொழி , அவர்களது பாரம் பரிய வழிமுறைகள் பாது காக்கப்பட வேண்டும். அவர்களின் கல்வி நிறுவன உரிமைகளும் பாதுகாக்கப் பட்டு அவர்கள், தாங்கள் பாதுகாப்பாகவும், மற்றவர் களோடு சமமாக நடத்தப் படுவதாகவும் உணர வேண் டும். மேற்கண்டவாறு நீதிபதிகள் அறிவுறுத்தினார் கள்
நன்றி:- மணிச்சுடர்
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top