Mohamed Farook Mohamed Farook Author
Title: சினிமாவை தவிர்த்து சாதிக்கும் நடிகர்கள்.!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் அதிலும் நடிகர்கள் தற்போது திரையில் சாதிப்பதைக் காட்டிலும் திரையைக் கடந்து நிஜத்திலும் சாதிப்பதில் ...
தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் அதிலும் நடிகர்கள் தற்போது திரையில் சாதிப்பதைக் காட்டிலும் திரையைக் கடந்து நிஜத்திலும் சாதிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது அவர்களின் திரை நாயக பிம்பத்தை வலுப்படுத்துவது போலவே இருக்கிறது.

நடிகர் ஆர்யா தன்னுடைய உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக சைக்கிளிங் எனப்படும் மிதிவண்டியை ஓட்டும் பயிற்சியை விளையாட்டாகத் தொடங்கினார். ஆனால் அதில் அதிக ஆர்வம் ஏற்பட ஒரு சைக்கிள் வீரர் போல் சர்வதேச போட்டியில் பங்குபற்றி பரிசையும், கோப்பையும் வென்று சாதனை படைத்தார். தற்போது நடித்து வரும் கடம்பன் படத்திலும் கூட கட்டுமஸ்தான் உடற்கட்டுடன் வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

அதேபோல் நடிகர் பரத், ஒரு படத்திற்காக சிக்ஸ்பேக் உடலமைப்பை உருவாக்கிக் கொள்வதற்காக உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கினார். இன்று அவர் ஒரு சிறந்த ஆணழகன் என்று சொல்லுமளவிற்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் நடிகர்களின் சிக்ஸ் பேக் தோற்றம் எதிர்காலத்தில் பின்விளைவை ஏற்படுத்துபவை என்ற கருத்தை ஒரு சாரார் கூறி வந்தனர். இந்நிலையில் அந்த கூற்றை பொய்யென நிரூபிக்கவும், தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து தனக்கு ஆர்வமான மலையேற்றத்தில் ஈடுபடுவதற்காகவும் நடிகர் பரத் கடந்த மாதத்தில் ஒரு குழுவினருடன் இமயமலைப் பகுதிக்கு சென்று மலையேற்றத்தில் ஈடுபட்டு தங்களின் மனஉறுதி மற்றும் வித்தியாசமான சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனைப் புரிந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தனர்.

அந்த வகையில் தற்போது தெகிடி, ஜீரோ உள்ளிட்ட படங்களில் நடித்த இளம் நடிகர் அசோக் செல்வன், இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் கனவான நீண்ட தூர நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

இந்தியாவிலேயே அதிக தூரம் நேரான நெடுஞ்சாலையையும், அதிக ஆபத்தான பாதையுமான லே நெடுஞ்சாலையில் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து பயணித்துள்ளனர். சுமார் 14 நாள்கள் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சவால் மிகுந்த நெடுஞ்சாலையில் பயணித்து இளைய தலைமுறையினருக்கு சாகச பயணம் குறித்த ஆசையையும், விழிப்புணர்வையும் ஊட்டியிருக்கிறார் அசோக் செல்வன்.
சைக்கிளிங், மலையேற்றம், சாகச பயணம் என வித்தியாசமானவற்றை செய்து சினிமாவைக் கடந்து இரசிகர்களை ஈர்த்துவரும் இவர்களின் அணுகுமுறை அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தகவல் : சென்னை அலுவலகம்

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top