காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சோம்பேறிகள் அதிபுத்திசாலிகளாக இருக்கலாம் - புதிய ஆய்வு முடிவு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அமெரிக்காவின் புளோரிடா கல்ப் கோஸ்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் அதிக சுறுசுறுப்பான 30 மாணவர்களையும் அதிகம் ச...
அமெரிக்காவின் புளோரிடா கல்ப் கோஸ்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் அதிக சுறுசுறுப்பான 30 மாணவர்களையும் அதிகம் சிந்தனை செய்யும் 30 மாணவர்களையும் தேர்வு செய்து ஒரு வாரத்திற்கு அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.

ஒரு வாரத்திற்கு பிறகு ஆய்வில் கிடைத்த தகவல்களை ஆராய்ந்த போது சிந்தனை செய்யும் பிரிவை சேர்ந்த 30 பேரின் ஒட்டுமொத்த உடல் அசைவுகள் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

அதிகம் சிந்தனை செய்யக்கூடியவர்கள் விரைவாக சலிப்படைந்து விடுகிறார்கள். ஆனால் இவர்கள்தான் அதிக நுண்ணறிவு திறன் கொண்டவர்கள் என்றும் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

அதேசமயம் சுறுசுறுப்பானவர்கள் சிந்தனை செய்வதில் இருந்து தப்பிப்பதற்காக தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு நுண்ணறிவு திறன் குறைவு என்பது ஆய்வாளர்களின் முடிவு. இனி உங்களை யாராவது சோம்பேறி என்று திட்டினால் கோபப்படாதீர்கள். உண்மையில் அவர் உங்களை புத்திசாலி என்றுதான் பாராட்டுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top