காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: முஸ்லிம்கள் அதிக சிரமங்களுக்கு ஆளாக காரணம் - மோடியும் ஒபாமாவும்தான்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஷாருக்கான் அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடியும் அதிபர் ஒபாமாவும்தான் காரணம் என உத்தர ...
ஷாருக்கான் அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடியும் அதிபர் ஒபாமாவும்தான் காரணம் என உத்தர பிரதேச மந்திரி அசாம்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தவை பின்வருமாறு:- உத்தர பிரதேசத்தி்ல் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக போலீசார் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குற்றம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

பா.ஜ.க.வின் ஆட்சியில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வாய்ப்புகளை எதிர்நோக்கி பி.எஸ்.பி. எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் தற்போது அனுபவித்து வரும் சிரமங்களுக்கு பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும்தான் காரணம். நாங்கள் இங்கு அமைதியான வாழ்க்கையை வாழ மோடிஜி அனுமதிக்க மாட்டேன் என்கிறார்.

அதேபோல் அமெரிக்காவில் எங்களை வாழவே விட மாட்டேன் என்கிறார் அதிபர் ஒபாமா. நாங்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறோம். எங்கே செல்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அசாம்கான் தெரிவித்தார்.

thanks -  jaffnamuslim

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top