"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/8/16

குஜராத் மாநிலத்தில், பசுவைக் கொன்று அதன் தோலை உரித்ததாகச் சொல்லி, குஜராத் மாநிலம் உனா நகரில் தலித் இளைஞர்கள் 4 பேரை, ஆர்எஸ்எஸ் சங்-பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள், நடுரோட்டில் வைத்து இரும்புக் கம்பிகளால் அடித்துத் தாக்கினர். இதனால் இறந்த கால்நடைகளை இனி தூக்கிச் சுமக்கவோ, அவற்றை அப்புறப்படுத்தவோ மாட்டோம் என்று தலித் அமைப்புகள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் இறந்த மாடுகள் துர்நாற்றத்துடன் உள்ளது.

நடுரோட்டில் அடித்தது மட்டுமின்றி, அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றனர். அவமானப்பட்ட அந்த தலித் இளைஞர்கள் விஷமருந்தி தற்கொலைக்கும் முயன்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலத்தில் தலித் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் இறங்கினர். அதனொரு பகுதியாக, ‘தலித் மானவ் அதிகார் இயக்கம்’ என்ற குஜராத்தின் முக்கியமான தலித் அமைப்பின் தலைமையில், பல்வேறு தலித் அமைப்பினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாட்டுத் தோல் உரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்தகைய வன்முறையை சந்தித்து வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் நாளொன்றுக்கு 200 கால்நடைகளின் தோல் உரிப்பு உள்ளிட்ட வேலைகளை, தங்களின் பணியாளர்களை வைத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றனர். இதனால் மாநிலம் முழுவதும், இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்த முடியாமல், சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகிகள் திண்டாட்டத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால் அப்பகுதியில் இறந்த மாடுகள் துர்நாற்றத்துடன் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.