Mohamed Farook Mohamed Farook Author
Title: "நீ இஸ்லாமியன் தானே" : தெருவில் பள்ளி மாணவனுக்கு நடந்த விபரீதம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
லண்டனில் இஸ்லாம் மாணவர் ஒருவர் தனது பள்ளித்தோழியை கட்டி தழுவிய குற்றத்திற்காக அந்த மாணவன் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த...
லண்டனில் இஸ்லாம் மாணவர் ஒருவர் தனது பள்ளித்தோழியை கட்டி தழுவிய குற்றத்திற்காக அந்த மாணவன் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newham இல் உள்ள Wilson சாலையில் நின்றுகொண்டிருந்த 16 வயது பள்ளி மாணவன், தன்னுடன் பயிலும் சக மாணவியை கட்டி தழுவியுள்ளார்.
அப்போது, அந்த வழியாக காரை ஓட்டி வந்த Michael Coe(35) என்ற நபர், அந்த மாணவனுக்கு அருகில் சென்று, நீ இஸ்லாமியன் தானே அவ்வாறு இருக்கையில் எவ்வாறு இந்த பெண்ணை கட்டி தழுவுவாய் என கூறியுள்ளார்.

இதனை அச்சிறுவன் கண்டுகொள்ளாமல் இருக்கவே, கோபம் கொண்ட இந்நபர், அச்சிறுவனின் தொண்டையில் தாக்கியதில் அவன் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளான்.

மேலும் அவன் வாயிலிருந்து ரத்தம் வடிந்துள்ளது, இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் விரைந்து வந்து அந்த மாணவனுக்கு முதலுதவி அளித்துள்ளார்.

மேலும், அந்நபரின் கார் எண்ணை குறித்துக்கொண்ட ஆசிரியை, நடந்த சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இனவாத அடிப்படையில் நடந்துகொண்ட குற்றத்திற்காக அந்நபர் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், அந்நபரோ மேற்கூறிய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தற்காப்பு காரணம் கருதியே அந்த மாணவனை தாக்கினே எனவும் கூறியுள்ளார்.
தற்போது இது தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top